சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் பதவிக் காலத்தை மேலும் 2 ஆண்டுகள் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் பதவிக் காலத்தை மேலும் 2 ஆண்டுகள் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சமூகநீதி அளவுகோலானது சட்டப்படி முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை குழு கண்காணிக்கும். பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்து அரசு உத்தரவிட்டிருந்தது. குழுவின் பதவிக் காலம் கடந்த டிச.23ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் மேலும் 2 ஆண்டுகள் நீட்டித்து அரசு ஆணையிட்டுள்ளது.

Related Stories: