திருச்செங்கோடு, டிச.30: திருச்செங்கோடு அண்ணா சிலை அருகில் விஜயகாந்த் 2ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப் பட்டது. தேமுதிக நகர செயலாளர் குணசேகரன் தலைமையில் விஜயகாந்த் படத்திற்கு மாவட்ட செயலாளர் விஜய்சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், துணை செயலாளர் சக்திவேல், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், நாகராஜ், திருச்செங்கோடு வடக்கு ஒன்றிய செயலாளர் நாகராஜ், மாவட்ட தொழிற்சங்க தலைவர் சதீஷ், நெசவாளர் அணி துணைச் செயலாளர் இளமுருகன், மகளிர் அணி செயலாளர் அலமேலு, விவசாய அணி துணை செயலாளர் ராஜா, மாணவரணி துணை செயலாளர் சரவணன், நகர அவைத் தலைவர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வடக்கு மாவட்டம் முழுவதும் அனைத்து நகர, ஒன்றிய, பேரூர் கழகத்திலும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் 50 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விஜயகாந்த் நினைவு தினம்
- விஜயகாந்த் நினைவு தினம்
- திருச்செங்கோடு
- விஜயகாந்த் 2 வது ஆண்டு நினைவு நாள்
- அண்ணா சிலை
- திருச்செங்கோடு
- மாவட்ட செயலாளர்
- விஜய் சரவணன்
- டெமுட்டிகா நகரம்
- குணசேகரன்
- மாவட்ட பொருளாளர்
- மகாலிங்கம்
