பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

புதுடெல்லி: பிரதமர் மோடி பொருளாதார வல்லுநர்களை இன்று சந்தித்து கலந்துரையாட இருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-2027ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்வார் என்று எதிரபார்க்கப்படுகின்றது. புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை, இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 50சதவீத வரி போன்றவற்றின் பின்னணியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் வரவிருக்கும் பட்ஜெட் குறித்து பொருளாதார வல்லுநர்களின் கருத்துக்களை கேட்பதற்காக பிரதமர் மோடி நாளை புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் மற்றும் துறை சார் நிபுணர்களை சந்தித்து பேசுகிறார்.

Related Stories: