கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உறை பனி பொழிவு தொடங்கியுள்ளது. புற்கள், வாகனங்கள் மீது பனி துகள் போர்வை போல சூழ்ந்துள்ளது. தொடர்ந்து காலை நேரங்களில் ஐந்து டிகிரி செல்சியஸ்-க்கும் கீழ் வெப்பம் பதிவாகி வருவதால் கடும் குளிர் நிலை காணப்படுகிறது.
