சென்னை: கீழடி வரலாற்றை மறைக்க ஒன்றிய அரசு முயற்சி செய்வதாக சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். கீழடி அகழாய்வு ஆய்வறிக்கையை எந்த வகையிலும் வெளியிட ஒன்றிய அரசு மறுக்கிறது. 114 பக்க கடிதத்தை அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு அனுப்பி இந்திய தொல்லியல்துறை விளக்கம் கேட்டுள்ளது. கீழடி நாகரிக காலத்தை மாற்றி அமைக்க ஒன்றிய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கீழடி நாகரிக காலத்தை மாற்ற அமர்நாத் ராமகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
