நெல்லை: நெல்லையில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது பொருநை அருங்காட்சியகம் தமிழரின் பெருமை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவிட்டுள்ளார். கீழடி அருங்காட்சியகத்திற்கு அடுத்து நெல்லையில் பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறோம். பொருநை ஆற்றங்கரையில் கிடைத்த பொருட்கள் வைத்து அருங்காட்சியகம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. தமிழரின் தொன்மையை உலக அரங்கில் கொண்டு செல்லும் முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது
இரும்பை உருக்கி கருவிகளை செய்யும் தொழில்நுட்பம் தமிழ்நாட்டில்தான் சிறந்து விளங்கியது. சிவகளையில் தொல்லியல் அகழாய்வில் கிடைத்த இரும்பு தொன்மையானது. ஆதிச்சநல்லூர், சிவகளை அகழாய்வில் வெண்கலம், செம்பு தொல்பொருட்கள் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளன. பொருநை தமிழரின் பெருமை என உரக்கச் சொல்வோம்.
தமிழர்களின் தொன்மை, நாகரிகத்தை GEN Z தலைமுறைக்கும் கடத்தும் வகையில் பொருநை அருங்காட்சியகம். இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் எழுதப்பட வேண்டும். 2023ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கீழடி அருங்காட்சியகத்தை நான் திறந்து வைத்தேன். கீழடி அருங்காட்சியகத்தை இதுவரை 12.50 லட்சம் மக்கள் பார்வையிட்டுள்ளனர். நெல்லை பொருநை அருங்காட்சியகம் இன்று திறக்கப்படவுள்ள நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.
