சென்னை அண்ணா சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தின் 2-வது தளத்தில் தீ விபத்து

சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 8 மாடிகள் கொண்ட பி.எஸ்.என்.எல். கட்டடத்தில் 2-வது மாடியில் ஏற்பட்ட இந்த தீவிபத்தில் ஏராளமான மின்சாதனப் பொருட்கள் சேதமடைந்துள்ளன.

5 வாகனங்களில் சென்ற தீயணைப்பு துறையினர் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் ஏற்பட்ட தீயை அணைத்து வருகின்றனர். தீவிபத்து காரணமாக அண்ணாசாலை பகுதியில் பி.எஸ்.என்.எல் இண்டர்நெட், தொலைபேசி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த தீ விபத்தால் பி.எஸ்.என்.எல். அலுவலக பகுதியில் கரும்புகை வெளியேறிவருகிறது.

காலை நேரம் என்பதால் அலுவலத்தினுள் ஒரு சில ஊழியர்கள் மட்டுமே இருந்த நிலையில் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: