சென்னை: திரைப்படக் கல்லூரியில் தன்னுடன் படித்தவர் ஸ்ரீனிவாசன் என நினைவுகூர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் (69) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் இன்று காலை காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல இயக்குநர் வினித் ஸ்ரீனிவாசன் தந்தையான ஸ்ரீனிவாசன் 225 படங்களில் நடித்துள்ளார்.
நடிகர், இயக்குநர், வசனகர்த்தா என பன்முகத் திறமைக் கொண்ட ஸ்ரீனிவாசன் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் நடிகர் மட்டுமல்லாமல் திரைக்கதையாசிரியர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர். சுமார் 225 படங்களில் நடித்துள்ள இவர், தேசிய மற்றும் கேரள அரசின் விருதுகளை பெற்றவர்.
இவர் தமிழில் புள்ளக்குட்டிக்காரன், லேசா லேசா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், திரைப்படக் கல்லூரியில் தன்னுடன் படித்தவர் ஸ்ரீனிவாசன் என நினைவுகூர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். நல்ல நண்பரை இழந்துவிட்டதாக மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவு குறித்து ரஜினிகாந்த் உருக்கம். ஸ்ரீனிவாசன் மிகச்சிறந்த நடிகர், நல்ல மனிதர் என்று நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.
