பூவிருந்தவல்லி – போரூர் இடையிலான மெட்ரோ ரயில் பாதை சிக்னலுக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல்..!!

சென்னை: பூவிருந்தவல்லி – போரூர் இடையிலான மெட்ரோ ரயில் பாதை சிக்னலுக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. பூவிருந்தவல்லி – போரூர் மெட்ரோ ரயில் இயக்குவதற்கான ஒப்புதலை விரைந்து வழங்கக் கோரி 2 வாரம் முன் தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியது. ஒன்றிய அரசு தலையிட வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கடிதம் எழுதிய நிலையில் ரயில்வே வாரியம் சிக்னல் சிஸ்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. சிக்னல் கட்டமைப்புக்கு ஒப்புதல் அளித்த நிலையில் ஓரிரு நாளில் ரயில்வே வாரியம் வேகச்சான்றிதழ் அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிக்னலுக்கு ஒப்புதல் கிடைத்த நிலையில் வேகச்சான்றிதழ் கிடைத்தால் மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான நடவடிக்கை தீவிரமடையும். பிப்ரவரி இறுதிக்குள் பூவிருந்தவல்லி -வடபழனி மெட்ரோ வழித்தடங்களை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வழித்தட இணைப்புக்கு பின் பிப்ரவரியில் இருந்து பூவிருந்தவல்லி முதல் வடபழனி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும். பூவிருந்தவல்லி – போரூர் இடையே ஜனவரியில் இருந்து மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது.

 

Related Stories: