பாவங்கள் நீங்கும் நம்பிக்கையில் பாம்பன் கடலில் துணிகளை வீசும் ஐயப்ப பக்தர்கள்: அச்சத்தில் மீனவர்கள்

ராமேஸ்வரம்: பாம்பன் பாலத்தில் இருந்து பக்தர்கள் பழைய துணிகளை கடலில் வீசுவதால் மீன்களும் மற்றும் மீனவர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. சபரிமலை சீசன் என்பதால் ஐயப்ப பகதர்கள் ராமேஸ்வரத்துக்கு வருகை தந்து சமிதரிசனம் செய்துவிட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்கின்றனர். அப்படி செல்லும் வழியில் பாம்பன் பாலத்தில் நின்று பழைய துணிகளை கடலில் தூக்கி வீசுவதை காணமுடிகிறது . இதனால் கடலில் அங்கங்கே துணிகள் மிதக்கின்றன. பழைய துணிகளை கடலில் வீசுவதால் அரியவகை கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.

விசை படகு மற்றும் நாட்டுபடகுகளில் துணிகள் சிக்கி படகுகள் சேதம் அடையும் சுழலும் உருவாகிறது என மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பாவங்கள் நீங்கும் என்று நினைத்து பாம்பன் கடலில் பக்தர்கள் பழைய துணிகளை வீசி செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் உள்ளூர் மக்கள் வலியுறுத்திக்கின்றனர். கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் மீனவர்களின் நலன் கருதி ஐயப்ப பக்தர்கள் வேட்டி மற்றும் துண்டுகளை கடலில் வீசக்கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்து கண்காணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: