மெரினா பாரம்பரிய வழித்தடப் பணிகள் கடற்கரை பகுதிகளில் தீவிரம்..!!

சென்னை: சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் காமராஜர் சாலையில் உள்ள மெரினா கடற்கரை பகுதிகளில் மெரினா பாரம்பரிய வழித்தட திட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை மெரினா கடற்கரை பகுதியில் உள்கட்டமைப்பு பணிகள் அதன் பாரம்பரியம் மாறாமல் நடந்து வருகிறது. ஒட்டுமொத்தமாக ரூ.18.45 கோடி செலவில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பாக மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றனர். உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையுள்ள 3.2 கி.மீ தூரத்திற்கு இப்பணிகள் நடைபெறுகிறது.

உழைப்பாளர் சிலையில் இருந்து கலங்கரை விளக்கம் வரை 4 மீட்டர் அக்காலத்திற்க்கு நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது. நடைப்பாதையில் செயற்கை மிதிவண்டி பாதையும் அமைய உள்ளது. மேலும் சென்னை பல்கலைக்கழகம், எழிலகம், மாநிலக் கல்லூரி, ஐஸ் ஹவுஸ், விவேகானந்தார் இல்லம், ராணி மேரி கல்லூரி, டிஜிபி அலுவலகம், கலங்கரை விளக்கம் உள்ளிட்ட 9 இடங்களில் கூடுதலாக கடற்கரை பகுதிகளை ரசிக்கும்படி பார்வையாளர் தளங்கள் அமைக்கப்பட உள்ளது. காமராஜர் சாலையில் இருபுறம் உள்ள 9 பேருந்து நிறுத்தங்கள் 3 காவல் நிலையங்களை இணைக்கும் வகையில் பாதசாரி நடைபாதைகள் அமைக்கப்படும்.

மேலும் சைக்கிள் ஓடு பாதை, அதில் தெருவிளக்குகள், அதனை சுற்றி கண்காட்சி ஓவியங்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன. தற்போது 2.3 கி.மீ தூரத்திற்கு நடைபாதை அமைய உள்ள நிலையில் அதில் 800 கி.மீ தூரத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 9 பேருந்து நிறுத்தங்களில் 4 பேருந்து நிறுத்தப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது 50% சதவீதம் பணிகள் முடிந்து உள்ள நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதிக்குள் அனைத்து பணிகளும் நிறைவுபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: