மோடியும் அமித் ஷாவும் எத்தனை முறை வந்தாலும் மக்கள் தோற்கடிப்பார்கள்: மு.வீரபாண்டியன் கருத்து

சென்னை: பிரதமர் மோடி​யும், உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவும் எத்​தனை முறை தமி​ழ​கம் வந்​தா​லும், வரும் தேர்​தலில் அவர்​களை தோற்​கடிக்க தமிழக மக்​கள் தயா​ராக உள்​ள​தாக இந்​திய கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் தெரி​வித்​தார். துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லினின் 48-வது பிறந்த நாளை​யொட்​டி, திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்​பில் மாவட்ட திமுக அலு​வல​கத்​தில் ரத்​த​தான முகாம் நேற்று நடை​பெற்​றது. அமைச்​சர் அன்​பில் மகேஸ் தலைமை வகித்​தார். இந்​திய கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் முகாமை தொடங்கி வைத்​து, ரத்த தானம் செய்​தவர்​களுக்கு சான்​றிதழ்​களை வழங்​கினார்.

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் வீர​பாண்​டியன் பேசுகை​யில், “நாட்​டின் ஜனநாயகத்​தை, சட்​டத்தை காக்​கும் போரில் திமுக கூட்​டணி வெற்றி பெறும். திமுக வெற்​றிக்கு கூட்​டணி பலம் மட்​டும் காரணமல்ல, தமிழக மக்​களின் கருத்​தி​யல் ரீதி​யான ஒற்​றுமை​யும் காரணம். திமுக கூட்​ட​ணியை எதிர்க்க எத்​தனை கட்​சிகள் வந்​தா​லும்; பிரதமரும், உள்​துறை அமைச்​சரும் எத்​தனை முறை தமி​ழ​கம் வந்​தா​லும், அவர்​களை தோற்​கடிக்க தமிழக மக்​கள் தயா​ராக உள்​ளனர்” என்​றார்.

முன்​ன​தாக பெரம்​பலூரில் மு.வீர​பாண்​டியன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கேரளா​வில் உள்​ளாட்சி தேர்​தலில் இடது​சாரி கட்​சிகள் தோல்​வியை சந்​தித்​துள்​ளது. இத்​தோல்​வியை நாங்​கள் ஏற்​கி​றோம். இம்​மாற்​றம் ஜனநா​யத்​துக்கு தேவை​யான ஒன்​று​தான். அதேசம​யம் 42 ஆண்​டு​கள் திரு​வனந்​த​புரத்​தில் பொறுப்​பில் இருந்த நாங்​கள் தற்​போது தோல்​வி​யுற்​றதை, பிரதமர் மோடி​யும் மத்​திய அமைச்​சர் அமித் ஷாவும் தமி​ழ​கத்​துடன் ஒப்​பிட்​டுப் பேசுவது தவறு. தமிழக அரசி​யல் வேறு, கேரள அரசி​யல் வேறு. வரு​கிற சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக வெற்றி பெறு​வது உறு​தி. இவ்வாறு அவர் கூறினார்

Related Stories: