மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் நேற்று காலை வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு உடல் துண்டான நிலையில் இறந்து கிடந்தார். ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் அவர், மதுரை அருகே விராதனூரை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் தினேஷ்குமார்(31) எனத்தெரிந்தது. அவரிடமிருந்த அடையாள அட்டையில் இருந்து சென்னை நகர ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வந்தது தெரிந்தது.
சென்னையிலிருந்து மதுரைக்கு வந்த ரயிலுக்கான டிக்கெட்டும் இருந்தது. சென்னையிலிருந்து உறவினர்கள் 5 பேருடன் வந்ததாகவும், இடையில் ஒரு நிறுத்தத்தில் இறங்கியவர் சோழவந்தான் அருகே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. எனவே, அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி விழுந்து இறந்தாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.
