×

குளிர்காலத்தில் ஏற்படும் சளி, வறட்டு இருமலை தவிர்க்க தற்காப்பு நடவடிக்கைகள் என்ன என்ன?

சென்னை: குளிர்காலத்தில் ஏற்படும் சளி, வறட்டு இருமலை தவிர்க்க தற்காப்பு நடவடிக்கைளை கடைபிடிக்க மருத்துவர்கள் அறிவுறுதுகின்றனர். வெதுவெதுப்பான தேனீர், சூப் உள்ளிட்ட பருகுவதும், எலுமிச்சை சாறில் தேனீர் கலந்து பருகுவதும் பலனளிக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நோய் தொற்று பாதிப்புகளை தவிர்க்க முகக்கவசம் அணியவும், ஆழ்ந்த மூச்சி பயிற்சி மேற்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்துகின்றனர். எக்ஸ்ரே, சளி, ரத்தப் பரிசோதனை செய்து நிமோனியா, வேறு பாதிப்பு உள்ளதா என கண்டறிவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவாசப் பாதையை விரிவடையச் செய்யும் மருந்துகள், இருமலை கட்டுப்படுத்தும் மருந்துகள் ஆகியவற்றை, மருத்துவர்கள் பரிந்துரை படி உட்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். காய்சலுக்கு பிறகு 8 வரம் வரை வறட்டு இருமலை நீடித்து இருமலின் போது ரத்தம் வந்தால் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவது அவசியம் என பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. காய்ச்சல் காரணமாக சுவாசப் பாதை தொற்றுக்குள்ளான பிறகு 3 முதல் 8 வாரங்கள் வரை தொடர் இருமல் இருப்பது இயல்பானது என்றும். தொற்று ஏற்படும் 100 நபர்களில் 10-25 நபர்களுக்கு இத்தகைய பாதிப்பு இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சுவாசப் பாதையில் கிருமிகளால் ஏற்படும் அலர்ஜியே இதற்கு காரணம் என்றும். இதை தவிர மேற்புற சுவாசப் பாதையில் சைனஸ் பகுதிகளில் அலர்ஜி, நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது போன்றவற்றால் தொடர் இருமல் ஏற்படலாம் எனவும் கூறுகின்றனர். தமிழகம் முழுவதும் வைரஸ் காய்ச்சலுக்கு பிந்தைய தொடர் இருமல் பாதிப்புக்கு உள்ளாவோர் எண்ணிக்கை அண்மை காலமாக அதிகரித்து வருகிறது. சளி மற்றும் காய்ச்சல் குணமடைந்த பிறகும் சில வாரங்களுக்கு இருமல் நீடிப்பதால் அதற்காக மருத்துவமனைகளை பலர் நாடி வருகின்றனர்.

தமிழகத்தில் மழைக்கு பிறகு பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக குளிர் நிலவுகிறது. இத்தகைய தட்பவெப்பநிலை மாற்றம் காரணமாக இன்புளூயன்சா மற்றும் சுவாசப் பாதை தொற்று அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வறட்டு இருமல் இருந்து வருகிறது. சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த வரம் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்புகளால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு நாள் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : Chennai ,
× RELATED திருப்பரங்குன்றம் தீபத் தூண்...