திருப்பரங்குன்றம் விவகாரம் அரசின் கடமையில் முதல்வர் சூப்பர்: இந்திய கம்யூ. பாராட்டு

சிவகிரி: தென்காசி மாவட்டம் ராயகிரி பேருந்து நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா, மூத்த தலைவர் நல்லகண்ணு நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேசியதாவது; இந்தியா மதச்சார்பற்ற நாடு. நாட்டுக்கென்று ஒரு மதம் இல்லை. கம்யூனிஸ்ட்களுக்கும் மதம் இல்லை. திருப்பரங்குன்றம் பிரச்னையில் நீதிமன்ற தீர்ப்பில் எங்களுக்கு உடன்பாடில்லை. இதுவரை தீபம் ஏற்றுவதில் பிரச்னை இல்லை. இதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் மதிக்கிறோம்.

திருப்பரங்குன்றம் பிரச்னையில் தமிழக முதல்வர் நிதானமாக சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டார். முதல்வரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. நீதியரசர் போல் அவர் அவசரப்படவில்லை. ஒரு அரசின் கடமை என்னவோ அந்த கடமையை செய்தார். ஒன்றிய அரசு ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கிறது. நாடாளுமன்ற ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். தமிழக ஆளுநருக்கான பாடம் அவருக்கு விரைவில் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: