ஜனவரி முதல் வாரத்துக்குள் மாணவர்களுக்கு மடிக்கணினி: அமைச்சர் தகவல்

திருச்சி: திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திராவிட இயக்கம் ஆட்சிக்கு வரும் போது பெண்களின் மேம்பாட்டுக்கான திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். அதனால் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளோம். ஆட்சிக்கு வந்த போது இருந்த நிதி நெருக்கடிகளை சரி செய்ய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதன்படிதான் மகளிர் உரிமை தொகையும் அதிகம்பேருக்கு வழங்கப்படுகிறது.

தேர்தலுக்காக இதை செய்யவில்லை. திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். அடுத்த 15 ஆண்டுகாலம் நிச்சயம் திமுக தான் ஆட்சியில் இருக்கும். யார் என்ன விமர்சனங்கள் வைத்தாலும் இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது தொடர்பாக டெண்டர் விடப்பட்டு விட்டது. டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி முதல் வாரத்தில் மடிக்கணினி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Related Stories: