தமிழகம் முழுவதும் நடந்த லோக் அதாலத் 1.3 லட்சம் வழக்குகளில் தீர்வு: ரூ.858 கோடி பைசல்

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று நடந்த தேசிய லோக் அதாலத்தில் 1,03,884 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு ரூ.857,77,65,260 பைசல் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் லோக் அதாலத் நடைபெற்றது. இந்த லோக் அதாலத்தில் செக் மோசடி வழக்குகள், தொழிலாளர் பிரச்னை தொடர்பான வழக்குகள், மின்சாரம், தண்ணீர் கட்டணம் தொடர்பான வழக்குகள், ஜீவனாம்சம் உள்ளிட்ட குடும்பநல வழக்குகள், சிவில் வழக்குகள் என 1 லட்சத்திற்கும் மேற்ப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதற்காக உயர் நீதிமன்றத்தில் 6 அமர்வுகளும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 3 அமர்வுகளும், மாவட்டம் மற்றும் தாலுகா அளவிலான நீதிமன்றங்களில் 504 அமர்வுகளும் ஏற்படுத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் நடந்த இந்த லோக் அதலத்தில் 1,03,884 வழக்குகளில் தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் வழக்கு தொடர்ந்தவர்களுக்கு ரூ.857,77,65,260 பைசல் செய்யப்பட்டது.

இந்த லோக்அதாலத் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணையத்தின் செயல்தலைவர் மூத்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் மேற்பார்வையிட்டார், நீதிபதி பி.பி.பாலாஜி லோக் அதாலத்தில் கலந்து கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் மற்றும் பைசல் தொகையை வழங்கினார். இதில் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் எஸ்.பாலகிருஷ்ணன் அனைத்து ஏற்பாடுகளையும் நடத்தினார்.

Related Stories: