பட்டாசு கடை அமைய உள்ள இடங்களில் போலீசார் ஆய்வு

திருப்பூர், செப்.27: தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கு மாநகரம், புறநகரில் பலரும் விண்ணப்பித்து வருகின்றனர். திருப்பூர் மாநகரில் இதுவரை 70 பேர் தற்காலிக பட்டாசு கடைகளுக்கு விண்ணப்பித்து உள்ளனர். தொடர்ந்து விண்ணப்பித்தும் வருகின்றனர். இதனைதொடர்ந்து, விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணியில் போலீசார் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கடைகள் அமைய உள்ள இடம் பாதுகாப்பானதா,உரிய சான்றுகள் இணைக்கப்பட்டுள்ளதா, அருகே காஸ் குடோன்கள் ஏதாவது அமைந்துள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர். கள ஆய்வுக்கு பின், விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட்டு பட்டாசு கடைக்கு அனுமதி அளிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

 

Related Stories: