இல.கணேசனுக்கு புகழஞ்சலி முதல்வர் உள்பட அரசியல் கட்சி தலைவர்களுக்கு பாஜ அழைப்பு

சென்னை: மறைந்த ஆளுநர் இல.கணேசனுக்கு பாஜ சார்பில் புகழஞ்சலி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் 21ம் தேதி (நாளை) மாலை 5 மணிக்கு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜ நேரில் அழைப்பு விடுத்துள்ளது. பாஜ மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். தொடர்ந்து, அதிமுக, பாமக, விசிக உள்பட அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பாஜ சார்பில் நேரில் அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக பாஜ நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories: