திமுக கூட்டணியில் கொமதேக தொடரும்: ஈஸ்வரன் எம்எல்ஏ பேட்டி

நாமக்கல்: நாமக்கல்லில் கொங்கு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ அளித்த பேட்டியில், வரும் சட்டமன்ற தேர்தல், தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இருக்க வேண்டும் என்பதை மக்களிடம் கோரிக்கையாக வைக்கிறேன். திமுக கூட்டணியில் தான் நாங்கள் தொடர்கிறோம் என்பதில், யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கும் எண்ணம் எதுவும் எங்களுக்கு இல்லை. தேர்தலில் எத்தனை தொகுதி வேண்டும் என்பதை கூட்டணி தலைவரிடம் தான் தெரிவிப்போம் என்றார்.

Related Stories: