“இன்னும் ஓரிரு நாளில் நம் கூட்டணியில் ஒரு புதிய கட்சி இணையும்’’ – எடப்பாடி பழனிசாமி பேச்சு

 

 

சென்னை: ஓரிரு நாளில் புதிய கட்சி ஒன்று அதிமுக கூட்டணிக்குள் வர உள்ளது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. கடந்த 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடைபெற்ற நிலையில் இன்று 3-வது நாளாக நடைபெற்ற நேர்காணலில் விருதுநகர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது.

அப்போது பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி; நமது கூட்டணி வலிமையாக உள்ளது. ஓரிரு நாட்களில் புதிய கட்சி ஒன்று அதிமுக கூட்டணிக்குள் வரவுள்ளது. மேலும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நம்பிக்கையுடன் இருங்கள். அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும், நம்பிக்கையுடன் இருங்கள்; அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் வெற்றிக்கு உழைக்க வேண்டும். அதிமுக நிறுத்தும் வேட்பாளரை பெரும் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும். அதிமுக வேட்பாளராக யாரை நிறுத்தினாலும் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கூறினார்.

Related Stories: