பொங்கல் கொண்டாட்டம் முடிவதற்குள் பெண்களுக்கு இனிப்பான செய்தி முதல்வர் அறிவிப்பார்: அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி

திண்டுக்கல்: பொங்கல் கொண்டாட்டம் முடிவதற்குள் பெண்களுக்கு இனிப்பான செய்தியை முதல்வர் வெளியிட உள்ளார் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாநகராட்சி 44வது வார்டு மேட்டுப்பட்டியில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் ஐ.பெரியசாமியிடம், காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அமைச்சர், ‘‘ஆட்சியில் பங்கு கேட்பது காங்கிரசாரின் உரிமை. ஆனால், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி இருந்ததில்லை. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது எப்போதும் கிடையாது.

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி எல்லாம் கிடையாது என்பதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளார்’’ என்றார். தொடர்ந்து அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘சென்சார் போர்டு ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வைத்துள்ள குற்றச்சாட்டு உண்மை தான். சென்சார் போர்டு ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது. பொங்கல் கொண்டாட்டம் முடிவதற்குள் பெண்களுக்கு இனிப்பான செய்தியை முதல்வர் வெளியிட உள்ளார். விடுபட்ட மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

Related Stories: