திருப்பூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா திருப்பூரில் நேற்று நடைபெற்றது. இதில், மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் பங்கேற்று பேசியதாவது: இந்தியாவில் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற கனவை குறிவைத்து தகர்க்க பாஜ, ஆர்.எஸ்.எஸ் முயல்கிறது. தமிழ்நாடு ஒரு நல்லிணக்க பூமி, யார் வேண்டுமானாலும் இங்கு வந்து வாழலாம். சண்டை, சச்சரவுகள் இல்லை. இதனை சிதைக்க பார்க்கிறது பாஜ.
நாட்டின் ஜனநாயகம், அரசியல் சாசனம், மதசார்பின்மை காக்கப்படவேண்டும். இதற்காக நாம், திமுகவுடனான கூட்டணியில் உறுதியாக நிற்கிறோம். ஆனால் பாஜ- அதிமுக கூட்டணி நாட்டின் ஒற்றுமையை சிதைக்கும் கூட்டணியாக உள்ளது. தமிழக மக்கள் நல்லதொரு பாடத்தை பாஜ கூட்டணிக்கு வழங்குவார்கள். வரும் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, மகத்தான வெற்றிபெற்று நல்ல பாடத்தை ஒன்றிய அரசுக்கு கற்பிக்கும். இவ்வாறு பேசினார்.
