சி.பி.ராதாகிருஷ்ணனுடன் தமிழக பாஜ தலைவர்கள் சந்திப்பு

சென்னை: இந்தியாவின் துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 9ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தமிழக பாஜ மூத்த தலைவரும், மகாராஷ்டிரா மாநில ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவர் இன்று காலை 11 மணியளவில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். இந்நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணனை, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் ஒன்றிய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜ தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: