அவனியாபுரம்: தேர்தலில் யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு, ‘பொறுத்திருந்து பாருங்கள்’ என ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார். சென்னை செல்வதற்காக நேற்று மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘‘சி.பி.ராதாகிருஷ்ணன் அனைத்து மக்களிடமும் அன்பாகவும், பண்பாகவும் பழகக்கூடியவர். அவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்’’ என்றார். ‘‘மீண்டும் பாஜ கூட்டணியில் இணைவீர்களா அல்லது யாருடன் கூட்டணி அமைப்பீர்கள்’’ என்ற கேள்விக்கு, ‘‘பொறுத்திருந்து பாருங்கள்’’ என பதில் அளித்தார், ‘‘முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் தங்களை அண்ணன் என்று கூறியுள்ளாரே’’ என கேட்டதற்கு, ‘‘நான் அண்ணன் என்றால் அவர் எனக்கு தம்பி’’ என, சிரித்துக் கொண்டே பதிலளித்தார். ‘‘அடுத்த முறை பிரதமர் தமிழகம் வரும்போது உங்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என கூறப்படுவது’’ குறித்த கேள்விக்கு, ‘‘அதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்’’ என்ற ஓபிஎஸ், ‘‘விஜய்யுடன் கூட்டணி சேர்வீர்களா’’ என கேட்டபோது, ‘‘அவருடனான கூட்டணி தொடர்பாக, இதுவரை யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை’’ என்றார்.
யாருடன் கூட்டணி? பொறுத்திருந்து பாருங்கள்: ஓபிஎஸ் சஸ்பென்ஸ்
- கூட்டணி
- OPS
- Avaniyapuram
- ஓ. பன்னீர்செல்வம்
- முன்னாள்
- முதல் அமைச்சர்
- மதுரை விமான நிலையம்
- சென்னை
- ராதாகிருஷ்ணன்
