×

சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் (64) தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை!

சென்னை: திருவான்மியூரில் உள்ள இல்லத்தில் சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் (64) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மகள் சித்ராவின் துப்பட்டாவிலேயே தந்தை காமராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சின்னத்திரை நடிகை சித்ரா 2020ல் பூவிருந்தவல்லி அருகே ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ரா தற்கொலை தொடர்பாக அவரது கணவர் ஹேம்நாத் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்திருந்தனர்.

சித்ராவின் மரணம் தொடர்பான இந்த வழக்கின் விசாரணை திருவள்ளூர் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்றது. இதையடுத்து சித்ரா மரண வழக்கில் இருந்து அவரது கணவர் ஹேம்நாத் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்து திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது. ஹேம்நாத்திற்கு எதிராக உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறி நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இந்நிலையில், சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தையும் ஓய்வுபெற்ற காவலருமான காமராஜ் சென்னை திருவான்மியூரில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டில் அவரது அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்கமால் இருந்ததால், கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது காமராஜ் தூக்கில் சடலமாக தொங்கினார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலைக்கான காரணம் குறித்து திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட நிலையில் தற்போது அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

The post சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் (64) தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை! appeared first on Dinakaran.

Tags : Chitra ,Kamaraj ,Chennai ,Thiruvanmiyur ,Poovrindavalli ,
× RELATED திருவான்மியூரில் அதிர்ச்சி சம்பவம்...