×

சந்தை மதிப்பை குறைத்து காட்டி சொத்து வாங்கிய விவகாரம் ஐஏஎஸ் அதிகாரி சொத்து குவித்த விவகாரம் மீது விசாரணை: சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை தகவல்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ஏ.ஆர்.கோகுலகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில், திண்டுக்கல் மாவட்டத்தில் 2012 முதல் 2014 வரையிலும், தேனி மாவட்டத்தில் 2014 முதல் 2016 வரையிலும் கலெக்டராக பணியாற்றியவர் வெங்கடாச்சலம். இவர் தனது வருமானத்திற்கு அதிகமாக தனது மனைவி சுகுணாம்பாள் பெயரில் கோபிசெட்டி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். கோபிச்செட்டிபாளையத்தை சேர்ந்த கே.இ.கந்தசாமி என்பவரிடம் வாங்கிய சொத்துக்களின் சந்தை விலையை குறைத்து பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து வெங்கடாச்சலத்தின் மீது கோபிச்செட்டிபாளையம் போலீசில் கந்தசாமி புகார் கொடுத்துள்ளார். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து இந்த முறைகேடு நடந்துள்ளது. இந்நிலையில், கந்தசாமிக்கு எதிராக சுகுணாம்பால், கோபிச்செட்டிபாளையம் மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு லோக் அதாலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு தீர்வு காணப்பட்டது. தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ரூ.20 கோடி அளவில் சொத்துக்களை சுகுணாம்பாள் பெயரில் வெங்கடாச்சலம் வாங்கி குவித்துள்ளார். இதன்மூலம் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கடந்தாண்டு ஜூன் 15ம் தேதி தமிழக அரசுக்கும், மத்திய விஜிலன்ஸ் இயக்குருக்கும், தமிழக ஊழல் தடுப்பு துறைக்கும், மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்திற்கும் புகார் கொடுத்தேன். புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது புகார் மீது உரிய நவடிக்கை எடுக்குமாறு விஜிலன்ஸ் இயக்குநர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி என்.சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் முகிலன், மனுதாரரின் புகார்மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார். இதை பதிவு செய்த நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

The post சந்தை மதிப்பை குறைத்து காட்டி சொத்து வாங்கிய விவகாரம் ஐஏஎஸ் அதிகாரி சொத்து குவித்த விவகாரம் மீது விசாரணை: சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Bribery Department ,Chennai High Court ,Chennai ,Kokulakrishnan ,Venkatachalam ,Dindigul district ,Theni district ,Dinakaran ,
× RELATED லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர் மீது வழக்கு!!