×

ஆண்கள் ஸ்பெஷல் திருவிழா 65 கிடா வெட்டி அறுசுவை விருந்து

திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே அனுப்பப்பட்டியில் பழமை வாய்ந்த கரும்பாறை ஸ்ரீ முத்தையா சுவாமி கோயிலில் விவசாயம் செழிக்கவும், உலக நலன் வேண்டியும் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேர்த்திக்கடனாக பக்தர்கள் வழங்கிய 65 கிடாக்கள் வெட்டப்பட்டன. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சமையல் செய்யும் பணிகள் நடைபெற்றன. சமைத்த சாதம் மற்றும் ஆட்டுக்கறி, கறிகுழம்பு உள்ளிட்டவற்றை தயார் செய்து கரும்பாறையில் மலை போல் குவித்து வைக்கப்பட்டது. பின்னர் முத்தையா சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நேற்று காலை 5 வயது முதல் 80 வயது வரையிலான ஆண் பக்தர்கள் மட்டும் கோயில் வளாகத்தில் வரிசையாக தரையில் அமர்ந்து சாப்பிட்டனர். இதில், 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post ஆண்கள் ஸ்பெஷல் திருவிழா 65 கிடா வெட்டி அறுசுவை விருந்து appeared first on Dinakaran.

Tags : 65 kitas cut and delicious ,Thirumangalam ,Karumparai Sri Muthaiah Swamy Temple ,Anupapatti ,Madurai ,65 kitas cut and delicious feast ,
× RELATED திருமங்கலத்தில் ரயில்வே கேட் பராமரிப்பு பணிகள்: இன்று மூடப்படுகிறது