×

கீழடிக்கு வந்தது பெருமை பாரதி கொள்ளுப்பேரன் நெகிழ்ச்சி

திருப்புவனம்: தமிழ்நாட்டின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில், தமிழக அரசின் வேர்களை தேடி திட்டத்தின் கீழ் ஆன்மிக சுற்றுலா தலங்கள், பாரம்பரிய கட்டிடக் கலையை பார்வையிட வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் வருகின்றனர். நேற்று மாலை அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை கண்காணிப்பாளர் கனிமொழி தலைமையில், மலேசியா,மொரீஷியஸ், ஆஸ்திரேலியா, இலங்கை, அமெரிக்கா, நார்வே, உகாண்டா, கனடா, மியான்மர், தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள கீழடிக்கு வந்தனர். அவர்கள், திறந்தவெளி அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர். இந்த மாணவர் குழுவில் பாரதியாரின் வம்சாவளி கொள்ளுப்பேரன் இனியனும், அமெரிக்காவில் இருந்து வந்திருந்தார். அவர் கூறுகையில், பாரதியாரின் வம்சாவளியைச் சேர்ந்த நான் கீழடிக்கு வந்தது பெருமையாக உள்ளது’’ என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

The post கீழடிக்கு வந்தது பெருமை பாரதி கொள்ளுப்பேரன் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Bharathi ,Lainchi ,Keezhadi ,Tamils ,Tamil Nadu government ,Tamil Nadu Department of Welfare and Rehabilitation ,
× RELATED மூளையின் முடிச்சுகள்