*பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கரூர் : கரூர் மாநகராட்சி பகுதிகளில் அதிகளவு வளர்ந்து, பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் பார்த்தீனிய செடிகளை அழிக்க மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஷ செடிகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்த்தீனிய செடி வகைகள் உள்ளன. ஆஸ்த்துமா, மூச்சுத்திணறல் உட்பட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் திறன் கொண்ட இந்த செடிகளை அழிக்க தமிழகம் முழுதும் சில ஆண்டுகளுக்கு முன்பு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற்கு பிறகு இதனை அழிக்க எந்த ஒரு இயக்கமும் முயற்சி மேற்கொள்ளவில்லை.
இருப்பினும், பார்த்தீனிய செடிகளை முற்றிலும் கட்டுப்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் தமிழகம் மட்டுமின்றி, கருர் மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த வகை செடிகள் அதிகளவு படர்ந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே, கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர், தாந்தோணிமலை போன்ற குடியிருப்பு பகுதிகளில் அதிகளவு பார்த்தீனிய செடிகள் வளர்ந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக, வீடுகள் கட்டாமல் உள்ள காலியிடங்களில் இந்த வகை செடிகள் அதிகளவு வளர்ந்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சீத்த முட்செடிகளை விட இந்த பகுதியில் பார்த்தீனிய செடிகள்தான் அதிகளவு வளர்ந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சீத்த முட்செடிகள் நிலத்தடி நீர் மட்டத்தை பாதிக்கும் நிலையில், பார்த்தீனிய செடி வகைகள், அருகில் உள்ள மற்ற செடிகளின் வளர்ச்சியை பாதிப்பதோடு, கால்நடைகளுக்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
மேலும், காற்றின் காரணமாக ஒரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதில் இடம் பெயர்ந்து, அசுர வேகத்தில் வளர்ந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் திறன் இந்த வகை செடிகளுக்கு உண்டு எனக் கூறப்படுகிறது.கால்நடைகளுக்கு வேறு வகையான பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு, மற்ற உயிரினங்களுக்கும் இந்த செடிகளின் காரணமாக சுவாச கோளாறு போன்ற பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்புகள் அதிகளவு உள்ளது எனவும் கூறப்படுகிறது.
தற்போதைய நிலையில், தாந்தோணிமலை, ராயனூர், வெங்ககல்பட்டி போன்ற பல்வேறு பகுதிகளில் பார்த்தீனிய செடிகளின் ஆதிக்கம் அதிகளவு இருந்து வருகிறது. எனவே, இதனை முற்றிலும் கருர் மாநகர பகுதிகளில் இருந்து அகற்ற தேவையான ஏற்பாடுகளை போர்க்கால அடிப்பபடைடியில் மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
எனவே, இதுபோன்ற பகுதிகளில் அதிகளவு வளர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் இந்த விஷ செடிகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி விஷ செடிகளை அழிக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
The post பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் பார்த்தீனிய செடிகளை அழிக்க மாநகராட்சி நடவடிக்கை தேவை appeared first on Dinakaran.