×

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு அறுவை சிகிச்சை

டெல் அவிவ்: இஸ்ரேல் – காசா போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. இந்த போரில் காசாவில் செயல்படும் ஹமாஸ் படையினரை முற்றிலும் அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார். அதனை செயல்படுத்த கடந்த ஓராண்டாக காசா மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த வாரம் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு சிறுநீர் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நெதன்யாகுவுக்கு புரோஸ்டேட் நீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து நெதன்யாகுவின் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “புரோஸ்டேட் நீக்க அறுவை சிகிச்சைக்காக பெஞ்சமின் நெதன்யாகு மருத்துவமனையில் இருக்க வேண்டும். இதனால் நீதி துறை அமைச்சர் யாரிவ் லெனின் தற்காலிக பிரதமராக பணியாற்றுவார்” என தெரிவித்துள்ளது.

The post இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு அறுவை சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Netanyahu ,Tel Aviv ,Israel ,Gaza ,Benjamin Netanyahu ,Hamas ,Israeli ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல் மீது ஏமன் ராக்கெட் தாக்குதல்: 16 பேர் காயம்