டோக்கியோ: உலகின் மிக வயதான பெண்மணியாக கருதப்பட்ட ஜப்பானை சேர்ந்த டோமிகோ இடுகா காலமானார். உலகின் மிக வயதான பெண்மணி என்று கின்னஸ் சாதனை படைத்த மரியா பிரான்யாஸ் தனது 117வது வயதில் கடந்த ஆண்டு உயிரிழந்தார். இவர் மரணம் அடைந்ததால் கின்னஸ் உலக சாதனையின் படி உலகின் மிக வயதான பெண்மணியாக ஜப்பானின் டோமிகோ இடுகா(116) இருந்து வந்தார். ஒசாகாவில் பிறந்த இடுகா உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போது வாலிபால் வீராங்கனையாக திகழ்ந்துள்ளார். மேலும் 10,062 அடி உயரம் கொண்ட ஒன்டேக் மலையை இரண்டு முறை ஏறியுள்ளார். 20வயதில் திருமணம் செய்து கொண்ட இடுகாவிற்கு இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் இருந்தனர். தற்போது அவருக்கு ஒரு மகன், ஒரு மகள் மற்றும் ஐந்து பேரப்பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் ஆஷியாவில் உள்ள பராமரிப்பு இல்லத்தில் கடந்த 29ம் தேதி டோமிகோ இடுகா உயிரிழந்தார்.
The post உலகின் மிகவும் வயதான ஜப்பான் பெண் மரணம் appeared first on Dinakaran.