×

தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 ஒன்றியங்களில் 5 கோடியே 98 லட்சம் மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகள் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் துவக்கி வைத்தார்

தஞ்சாவூர், டிச 27: தஞ்சாவூர் மாவட்டத்தில் பூதலூர், திருவையாறு மற்றும் தஞ்சாவூர் ஒன்றியங்களில் 30 இடங்களில் ரூ. 5 கோடியே 98 லட்சத்தில் புதிய பல்வேறு துறைச் சார்ந்த அரசு கட்டிடங்களை உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகள் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. எம்பி முரசொலி, திருவையாறு எம்எல்ஏ துரை.சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பூதலூர் ஒன்றியம் முத்துவீரகண்டியன்பட்டி ஊராட்சியில் ரூ.13.40 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம், முத்தாண்டிப்பட்டியில் ரூ.12.67 லட்சத்தில் ரேஷன்கடை, ஆச்சாம்பட்டி ஊராட்சியில் ரூ.12.76 லட்சத்தில் ரேஷன் கட்டிடம், ஆச்சாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.32.80 லட்சத்தில் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டடமும், புதுக்குடி ஊராட்சி நண்டம்பட்டியில் ரூ.12.50 லட்சத்தில் புதிய ரேஷன்கட்டடமும்.

சுரக்குடிப்பட்டி ஊராட்சியில் ரூ.17.85 லட்சத்தில் புதிய ரேஷன்கட்டடமும், காங்கேயம்பட்டி ஊராட்சியில் விண்ணூர்பட்டியில் ரூ.9.67 லட்சத்தில் புதிய ரேஷன்கட்டடமும், மாரனேறி ஊராட்சியில் ரூ.25.00 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடமும், சோழகம்பட்டி ஊராட்சியில் ரூ.16 லட்சத்தில் புதிய பொதுவிநியோகக் திட்டகட்டடமும், கச்சமங்கலம் ஊராட்சியில் ரூ.15.50 லட்சத்தில் புதிய ரேஷன் கட்டிடமும், ஆற்காடு ஊராட்சியில் ரூ.12.21 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம், தீட்சசமுத்திரம் ஊராட்சியில் ரூ.30.10 லட்சத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம், கூடநாணலில் ரூ.13 லட்சத்தில் ரேஷன் கட்டிடம், பவனமங்கலம் ஊராட்சியில் ரூ.42.65 லட்சத்தில் கிராம செயலக கட்டடமும், வரகூர் ஊராட்சி ஆதி தெருவில் புதிய ரேஷன் கட்டிடம், அம்மையகரம் ஊராட்சியில் ரூ.12.50 லட்சத்தில் அங்கன்வாடி மையம், மணத்திடலில் ரூ.12.70 லட்சத்தில் ரேஷன் கட்டிடம், திருவலம்பொழில் ஊராட்சியில் ரூ.13.50 லட்சத்தில் அங்கன்வாடி,

கண்டியூர் ஊராட்சியில் ரூ.30.10 லட்சத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம், ரூ.17.70 லட்சத்தில் ரேஷன் கட்டிடம், தஞ்சாவூர் ஒன்றியம் ராஜேந்திரம் ஊராட்சியில் ரூ.29.77 லட்சத்தில் ரேஷன் கட்டிடம், ரூ.35 லட்சத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலைய கட்டிடமும், மானாங்கோரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டு வகுப்பறைகள், களிமேடு ஊராட்சி, ஜெபமாலைபுரம் ஊராட்சி, கள்ளபெரம்பூர் 1 சேத்தி ஊராட்சி, ஆலக்குடி ஊராட்சியில் புதி ரேஷன் கட்டிடங்கள், ஆலக்குடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடமும்.

வண்ணாரப்பேட்டையில் புதிய அங்கன்வாடி மைய கட்டடமும் என மொத்தம் ரூ. 5 கோடியே 98 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பீட்டில் திட்டப் பணிகளை துவக்கி வைத்து உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் துவக்கி வைத்தார். அமைச்சர் பேசும்போது, கிராமப்புறங்களில் மேம்பாடு பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு இத்திட்டங்களை விரைந்து செயல்படுத்தி உள்ளது. அங்கன்வாடி மைய கட்டடம்,ரேஷன்கட்டடம், ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம், கிராம செயலக கட்டடம், அங்கன்வாடி மைய கட்டடம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டு வகுப்பறை கட்டடம் போன்ற சிறப்பான திட்டப் பணிகளுக்கான புதிய கட்டடங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதம் ரூ.1000 உயர்கல்வி பெறுகிற மாணவிகளுக்கு மாதம் ரூ.1000, தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ரூ.1000 போன்ற திட்டங்களும், மக்களைத் தேடி மருத்துவம், \”உங்களைத் தேடி உங்கள் ஊரில்\” போன்ற திட்டங்கள் முன்னேற்ற திட்டங்களாக திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது. பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சிகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாலகணேஷ் , மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி , ஒன்றியக் குழுத் தலைவர் அரங்கநாதன் (எ) கல்லணை செல்லக்கண்ணு (பூதலூர்), வட்டாட்சியர்கள் அருள்ராஜ் (தஞ்சாவூர்), மரிய ஜோசப் (பூதலூர்), தர்மராஜ் (திருவையாறு), வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 ஒன்றியங்களில் 5 கோடியே 98 லட்சம் மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகள் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Higher Education Minister ,Kovi ,Cheliyan ,Thanjavur district ,Thanjavur ,Dinakaran ,
× RELATED யுஜிசி நிதியை வழங்காமல் சர்வாதிகார...