×

கண்மாய் கருவேல மரம் முன்னறிவிப்பின்றி ஏலம்

 

விருதுநகர், டிச.31: கண்மாய் கருவேல மரங்கள் முன்னறிவிப்பின்றி ஏலம் விடப்பட்டு முறைகேடு நடந்துள்ளதாக முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் புகார் அளித்தார். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சிவகாசி முன்னாள் ஒன்றிய காங்கிரஸ் கவுன்சிலர் முருகானந்தம் செவலூர் கிராம பொதுமக்கள் சார்பாக மனு அளித்தார்.

மனுவில், சிவகாசி ஊராட்சி ஒன்றியம் செவலூர் கண்டநேரி, நல்லயன்குளம் கண்மாய் கருவேல் மரங்கள், சீமை கருவேல் மரங்களை எந்த முன்னறிவிப்பின்றி ஏலம் விட்டுள்ளனர். ஊராட்சி அலுவலத்திலோ, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலோ அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்படவில்லை.

கிராமங்களிலும் சுற்றுவட்டார கிராமத்திலும் யாருக்கும் மரம் ஏலம் விட்டது தெரியாது. இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. கண்மாய் மர ஏலம் குறைந்த தொகைக்கு விடப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் ஏலத்தை ரத்து செய்து மறு ஏலம் விட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

The post கண்மாய் கருவேல மரம் முன்னறிவிப்பின்றி ஏலம் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Congress ,Kanmai ,Union Congress ,Councilor ,Sivakasi Muruganandam ,Sevalur ,Virudhunagar Collector ,Dinakaran ,
× RELATED இளம் பசுமை ஆர்வலர்களுக்கு மணிமுத்தாறில் 4 நாள் பயிற்சி