விருதுநகர், டிச.31: சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தனியார் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விழாவில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விருதுநகரில் உள்ள தனியார் ஆண்கள் நடுநிலைப் பள்ளியில் காமராஜர் சமூகநல அறக்கட்டளை, ஷெல் டிரஸ்ட் இணைந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில், அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் கலந்து கொண்டு 13 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள இருசக்கர வாகனம் வழங்கினார். மேலும் 50 பயனாளிகளுக்கு வாக்கிங் ஸ்டிக் மற்றும் 10 கிலோ அரிசியை ஷெல் டிரஸ்ட் நிறுவனர் மகேந்திரன் வழங்கினார். மேலும் இதில், இலவச மருத்துவ முகாம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல் appeared first on Dinakaran.