வருசநாடு, டிச.31: புதிதாக வீடு கட்டுவதற்காக மூல வைகையில் மணல் அள்ளிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேனி மாவட்டம் வருசநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஹாரீஸ்(29). இவர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டுவதற்காக மூல வைகை ஆற்றில் இருந்து மணல் அள்ளிவந்து தனது வீட்டின் முன்பு குவித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த வருசநாடு போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், இந்த சம்பவம் குறித்து வருவாய்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து மயிலாடும்பாறை விஏஓ ரகு வருசநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஹாரீஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post புதிய வீடு கட்டுவதற்காக மூல வைகையில் மணல் அள்ளியவர் மீது வழக்கு appeared first on Dinakaran.