ராமநாதபுரம், டிச.31: ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கீழக்கரை சேர்ந்த இஸ்மத் இன்னூன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் ஆகிய இருவரும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ் தனித்தனியான வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இஸ்மத் இன்னூன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தில் நடவடிக்கை எடுக்க எஸ்.பி சந்தீஷ் பரிந்துரை செய்தார். அதன்படி 2 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டார். இதையடுத்து இருவர் மீதும் குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
The post குண்டர் சட்டத்தில் இரண்டு பேர் கைது appeared first on Dinakaran.