×

மூணாறில் இன்று இரண்டு அடுக்கு சுற்றுலா பேருந்து சேவை துவக்கம்

மூணாறு, டிச.31: மூணாறில் சுற்றுலா பயணிகளுக்கான இரண்டு அடுக்கு பேருந்து சேவை இன்று தொடங்குகிறது. கேரள மாநிலத்தின் பிரபல சுற்றுலா தலமான மூணாறில், சுற்றுலா பயணிகளுக்காக இரண்டு அடுக்கு பேருந்து சேவையை இன்று மாலை, போக்குவரத்து துறை அமைச்சர் கே.பி.கணேஷ் குமார் துவக்கி வைக்கிறார். இந்த பேருந்து, மூணாறு அரசு டிப்போவில் இருந்து டாப் ஸ்டேஷன், குண்டளை, மாட்டுப்பட்டி, ஆணையிரங்கல் அணை, பூப்பாறை போன்ற பகுதிகளுக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முற்றிலும் திறந்த வெளி பேருந்து என்பதால், பயணிகள் இயற்கை காட்சிகளை முழுமையாக அனுபவிக்க முடியும்.

இரட்டை அடுக்கு பேருந்து சேவையானது, கேரளா அரசு பேருந்து கழகத்தின் சமீபத்திய புதிய முயற்சியான ‘ராயல் வியூ’வின் ஒரு பகுதியாகும். முதற்கட்டமாக, திருவனந்தபுரத்தில் நகர சுற்றுலா என்ற பெயரில் தொடங்கப்பட்ட திறந்த வெளி இரட்டை அடுக்கு பேருந்து சேவை மிகவும் பிரபலமாகி வெற்றி பெற்றது. அதன் அடிப்படையில் மூணாறிலும் சுற்றுலா பயணிகளுக்காக இந்த சேவை இன்று தொடங்கப்படவுள்ளது. இதற்காக கடந்த ஏப்ரலில், மூணாறில் இரட்டை அடுக்குப் பேருந்து சுற்றுலா சேவை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post மூணாறில் இன்று இரண்டு அடுக்கு சுற்றுலா பேருந்து சேவை துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Munnar ,Kerala ,Transport Minister ,K.P. Ganesh Kumar… ,-decker ,
× RELATED வழிகாட்டி பலகையை மரக்கிளைகள் மறைப்பதால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்