×

மின்சாரம் பாய்ந்து 2 மாடுகள் உயிரிழப்பு

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த, நந்தியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் நிஜந்தன். கறவை மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் பரவலாக பலத்த காற்றுடன் மழை பெய்து வந்தது. இந்நிலையில், நந்தியம்பாக்கத்தில் நிஜந்தனின் கறவை மாடுகள் மேய்ச்சலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பின.

அப்போது அவ்வழியில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து 2 கறவை மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இதுகுறித்து, கால்நடை துறை அதிகாரிகள் மற்றும் மீஞ்சூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பழமையான மின் கம்பிகளையும், சிதிலமடைந்த மின் கம்பங்களையும் மின்வாரிய ஊழியர்கள் முறையாக சீரமைத்திட வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post மின்சாரம் பாய்ந்து 2 மாடுகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Nijanthan ,Nandiyambakkam ,Meenjur ,Tiruvallur ,Tiruvallur district ,Nandiyambakkam… ,Dinakaran ,
× RELATED மாமண்டூர் அருகே பரபரப்பு கம்பி லோடு...