×

தனியார் வங்கியில் போலி நகையை அடகு வைத்து ₹11.45 லட்சம் நூதன மோசடி: இருவர் கைது

தாம்பரம்: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியை சேர்ந்த சுரேந்திரன் (51) என்பவர், கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் வங்கியில், கடந்த 2021ம் ஆண்டு முதல் வாடிக்கையாளராக இருந்து வந்தார். இவர், கடந்த 20.7.2024 அன்று வியாசர்பாடி எம்கேபி நகரை சேர்ந்த தனது நண்பர் பாஸ்கரன் (55) என்பவரை வங்கியில் புதிய வாடிக்கையாளராக சுரேந்திரன் அறிமுகம் செய்து, புதிதாக வங்கி கணக்கு தொடங்கியுள்ளார். அப்போது, 87 கிராம் தங்க வளையல்களை அடமானம் வைத்து ₹4,65,400 பெற்றுள்ளார்.

மீண்டும் 23.7.2024 அன்று, பாஸ்கரன் பெயரில் மீண்டும் 17 கிராம் தங்க வளையலை அடமானம் வைத்து ₹91,400 பெற்று சென்றுள்ளார். அதனை தொடர்ந்து 25.7.2024 அன்று, சுரேந்திரன் தனது பெயரில் 110 கிராம் தங்க வளையல்களை அடமானம் வைத்து ₹5,88,500 பெற்றுள்ளார்.

அதன்படி சுரேந்திரன் மற்றும் பாஸ்கரன் ஆகிய இருவரும் மொத்தம் 214 கிராம் நகைகளை அடமானம் வைத்து ₹11,45,300 பெற்றனர். இந்நிலையில் கடந்த 9.8.2024ம் தேதி முதல் 31.8.2024ம் தேதி வரை வங்கியில் நடந்த கணக்கு தணிக்கையில், சுரேந்திரன் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் அடமானம் வைத்த வளையல்கள் போலியானவை என தெரிய தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வங்கி கிளை மேலாளர் சுதர்சன், சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேந்திரன் மற்றும் பாஸ்கரன் ஆகியோரை தேடி வந்தனர்.

இந்நிலையில் மறைமலைநகர் பகுதியில் உள்ள சுரேந்திரனின் உறவினர் வீட்டில் சுரேந்திரன் மற்றும் பாஸ்கரன் தலைமறைவாக இருப்பதை அறிந்த போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில் சுரேந்திரன் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் தாம்பரம், நங்கநல்லூர், கோயம்பேடு பகுதிகளில் உள்ள அதே தனியார் வங்கியின் கிளைகளில் போலி நகைகளை வைத்து பல லட்சம் பெற்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் நீதிமன்ற உத்தரவின் படி சிறையில் அடைத்தனர்.

The post தனியார் வங்கியில் போலி நகையை அடகு வைத்து ₹11.45 லட்சம் நூதன மோசடி: இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Surendran ,Seeyaru, Tiruvannamalai District ,Matravancheri ,Vyasarbadi MKB ,Dinakaran ,
× RELATED தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் லாரி...