×

ராஜிவ் ஆட்சியில் தடை செய்யப்பட்ட சல்மான் ருஷ்டி புத்தகம் இந்தியாவில் விற்பனை

புதுடெல்லி: சல்மான் ருஷ்டி இந்தியாவில் பிறந்த பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளர். இவர் கடந்த 1988ம் ஆண்டு ‘தி சாத்தானிக் வெர்சஸ்’ (சாத்தானின் கவிதைகள்) எனும் சர்ச்சைக்குரிய புத்தகத்தை வெளியிட்டார். முகமது நபிகள் குறித்த இந்த புத்தகத்தால் சல்மான் ருஷ்டியின் உயிருக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டது. அவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். இதற்கிடையே, இந்த புத்தகத்தை இந்தியாவில் வெளியிட அப்போதைய பிரதமர் ராஜிவ்காந்தி தலைமையிலான அரசு தடை விதித்தது. கடந்த 2019ம் ஆண்டில் ருஷ்டியின் புத்தகத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யத் தவறியதால், தடையே விதிக்கப்படவில்லை எனக் கருதுவதாக கூறி விசாரணையை டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் முடித்து வைத்தது. இந்நிலையில், ‘தி சாத்தானிக் வெர்சஸ்’ புத்தகம் 36 ஆண்டுகள் கழித்து டெல்லியில் உள்ள பஹ்ரிசன்ஸ் புத்தக விற்பனை மையத்தில் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. புத்தகத்தின் விலை ரூ.1,999. இந்த விலை மிக அதிகம் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

The post ராஜிவ் ஆட்சியில் தடை செய்யப்பட்ட சல்மான் ருஷ்டி புத்தகம் இந்தியாவில் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Salman Rushdie ,Rajiv ,India ,New Delhi ,Prophet Muhammad ,Dinakaran ,
× RELATED மருந்து கடையில் ஊசி போட்ட மாணவர் உயிரிழப்பு