- ஆர்எஸ்எஸ்
- பாஜக
- கேரளா
- திருவனந்தபுரம்
- ரிஜித்
- கண்ணூர் கண்ணபுரம்
- சிபிஎம்
- இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு
- DYFI
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் கண்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் ரிஜித். சிபிஎம் தொண்டரான இவர், இக்கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்க (டிஒய்எப்ஐ) உறுப்பினராகவும் இருந்தார். கடந்த 2005ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி ரிஜித் உள்பட 4 பேர் வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந் போது ஒரு கும்பல் 4 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இந்த சம்பவத்தில் ரிஜித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக கண்ணபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜவை சேர்ந்த 10 பேரை கைது செய்தது.
தலச்சேரி குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜவை சேர்ந்த ஸ்ரீகாந்த், ஸ்ரீஜித் ராஜேஷ் உள்பட 9 பேர் குற்றவாளிகள் என்று நேற்று நீதிமன்றம் அறிவித்தது. வழக்கு விசாரணையின்போது அஜேஷ் என்பவர் மரணமடைந்தார். இவர்களுக்கான தண்டனை அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று மாஜிஸ்திரேட் தெரிவித்தார். கொலை நடந்து 19 வருடங்களுக்குப் பின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
The post மார்க்சிஸ்ட் தொண்டர் கொலை ஆர்எஸ்எஸ், பாஜவினர் 9 பேர் குற்றவாளிகள்: கேரள நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.