திருத்தணி: கனகம்மாசத்திரம் காவல் எல்லைக்கு உட்பட்ட என்.என்.கண்டிகை அருகே வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சகுந்தலா (70). கணவரை இழந்த இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். ஆவடியில் வசித்து வரும் அவரது மகன் ரஜினியை பார்க்க கடந்த வாரம் வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்தார். இந்நிலையில், நேற்று காலை அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சகுந்தலாவுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன. அதில் இருந்த 4 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. புகாரின்படி, கனம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
The post கனகம்மாசத்திரம் அருகே பூட்டிய வீட்டில் நகை கொள்ளை appeared first on Dinakaran.