- ஒடிசா, ஆந்திரப் பிரதேசம்
- அண்ணாநகர்
- அண்ணாநகர் மதுவிலக்கு பிரிவு
- உதவி ஆணையாளர்
- சங்கு
- பெரம்பூர் நிலையம்
- பெரம்பூர்
அண்ணாநகர்: ஒடிசா, ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்திக்கொண்டு பெரம்பூர் நிலையம் நிலையம் வருவதாக அண்ணாநகர் மதுவிலக்கு பிரிவு உதவி ஆணையர் சங்கு என்பவருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று, பெரம்பூர் ரயில் நிலையம் அருகே மாறுவேடத்தில் ரயில்களை கண்காணித்தனர். அப்போது ஒரு வாலிபர் கையில் பெரிய பார்சலுடன் வந்தார். அவரை பிடிக்க போலீசார் சென்றபோது பார்சலை அங்கேயே போட்டுவிட்டு தப்பிக்க முயன்றபோது போலீசார் விரட்டி சென்று அந்த நபரை கைது செய்தனர். பார்சலை சோதனை செய்தபோது கஞ்சா இருந்தது.
இதையடுத்து கஞ்சா கடத்திவந்த திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக்(26) கைது செய்தனர். இவர் கடந்த 3 வருடமாக கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார். மாதத்துக்கு 40ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என்று கூறியதால் ஓடிசாவுக்கு சென்று கஞ்சா வாங்கிவந்து விற்பனை செய்துள்ளார். இவர் மீது ஏற்கனவே போக்சோ, அடிதடி உள்ளிட்ட 5 வழக்குகள் உள்ளது. அவரை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதுபோல், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போலீசார் தீவிரமாக கண்காணித்தபோது ஒரு வாலிபர் ஆந்திராவில் இருந்து பேருந்து மூலம் பெரிய பார்சலுடன் வந்தார்.
பின்னர் அவர் கடலூர் மாவட்டம் செல்லும் பேருந்தில் ஏறியபோது போலீசார் பிடித்து விசாரித்தபோது கஞ்சா வைத்திருந்தார். அவர் பண்ருட்டி பகுதியை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி தமிழரசன்(26) என்று தெரிந்தது. தினமும் ஆந்திராவுக்கு சென்று குறைந்தவிலையில் கஞ்சா வாங்கிவந்து விற்பனை செய்துள்ளார். இவரிடம் இருந்து 4 கிலோ கஞ்சா மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post ஒடிசா, ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திய 2 பேர் கைது: 6 கிலோ, 2 செல்போன் பறிமுதல் appeared first on Dinakaran.