- , PDO
- செங்கல்பட்டு
- திம்மாவரம் ஊராட்சி
- அம்பேத்கர் நகர்
- திம்மாவரம், செங்கல்பட்டு மாவட்டம்...
- பொதுமக்கள் முற்றுகை பி.டி.ஓ
- தின மலர்
செங்கல்பட்டு: அரசுக்கு சொந்தமாக இடத்தில் திறக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தில் இருந்த பீஸ் கேரியரை கொடுக்க வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், திம்மாவரம் அம்பேத்கர் நகர் பகுதியில் திம்மாவரம் ஊராட்சி மன்ற தலைவர் நீலமேகத்தின் சொந்த செலவில் சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதியதாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் நேற்றுமுன்தினம் திறந்து வைக்கப்பட்டது. இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அப்பகுதியை சேர்ந்த முன்னாள் வார்டு உறுப்பினர் மறைந்த மஞ்சப்பன் என்பவரது பெயரை வைத்துள்ளனர்.
இந்நிலையில், முறையான அனுமதி பெறாமல் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் அருள்தேவி காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அளித்த புகாரில் பேரில் நேற்று வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகலா குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பீஸ் கேரியரை எடுத்துள்ளார். இதனால் மின் இணைப்பு இல்லாமல் குடிநீர் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் பீஸ் கேரியரை எடுத்த வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகலாவை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் எடுத்த பீஸ் கேரியரை அதே இடத்தில் வைக்கும் வரை வட்டார வளர்ச்சி அலுவலரின் வாகனத்தை எடுக்க விடாமல் வாகனத்தின் முன் அமர்ந்தும், படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நடராஜன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து முறையான அனுமதி பெற்ற பின், பீஸ் கேரியரை வழங்குவதாக உறுதியளித்த பின் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் திம்மாவரம் ஊராட்சியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வந்தது.
The post பீஸ் கேரியரை தரக்கோரி பீடிஓ அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை appeared first on Dinakaran.