- திருப்பூருர்
- அன்வர் பாட்சா
- தையூர் அண்ணா நகர்
- கெலம்பக்தம்
- யாஸ்மின்
- சனா பாத்திமா
- சகனா
- சனா பாத்திமா கலம்பக்கம்
திருப்போரூர், டிச.21: கேளம்பாக்கத்தை அடுத்த தையூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அன்வர் பாட்சா. இவரது மனைவி யாஸ்மின். இவர்களுக்கு சனா பாத்திமா (11), சகானா (9) ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களில் சனா பாத்திமா கேளம்பாக்கம் அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 19ம் தேதி 8 மணியளவில் சனா பாத்திமாவை மயக்க நிலையில் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து வந்தனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அச்சிறுமி மூச்சுத்திணறி இறந்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, பெற்றோரிடம் மருத்துவர்கள் பேசியதில் தனது மகளுக்கு வலிப்பு நோய் இருப்பதாகவும் விளையாடும்போது கழுத்தில் துப்பட்டா சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கேளம்பாக்கம் போலீசார் மருத்துவமனைக்கு சென்று சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தியதில் மேற்கண்ட தகவலையே தெரிவித்தனர். இதனால் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுமியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பள்ளி மாணவி மர்ம மரணம் appeared first on Dinakaran.