- காஞ்சி காமாட்சி அம்மன் கோயில்
- காஞ்சிபுரம்
- காமாட்சி அம்மன் கோயில்
- மஹாஷாக்தி
- அறநிலையத்துறை உதவி ஆணையர்
- காஞ்சிபுரம்...
காஞ்சிபுரம், டிச.21: மகாசக்தி பீடங்களில் ஒன்றாக விளங்குவது காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில். இக்கோயிலில் உள்ள இரு உண்டியல்கள் 56 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் திறந்து எண்ணப்பட்டது. உண்டியல்கள் திறந்து எண்ணும் பணியை அறநிலையத்துறை காஞ்சிபுரம் சரக உதவி ஆணையர் கார்த்திகேயன், செயல் அலுவலர் சீனிவாசன், கோயில் காரியம் சுந்தரேசன், மணியக்காரர் சூரியநாராயணன் ஆகியோர் மேற்பார்வையிட்டனர். கோயில் பணியாளர்கள் மற்றும் ஆன்மீக பக்தர்கள் பலரும் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், 57 லட்சத்து 36 ஆயிரத்து 782 ரூபாய் ரொக்கமும், 178 கிராம் தங்கமும், 611 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
The post காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை வசூல் ₹57.36 லட்சம் appeared first on Dinakaran.