- செங்கல்பட்டு
- தமிழ்நாடு நில அளவையாளர்கள் சங்கம்
- செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம்
- தமிழ்நாடு அரசு
- லோகநாதன்
- தின மலர்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த சங்கத்தின் மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், களப்பணியாளர்கள் செய்யும் அனைத்து விதமான பணிகளையும் கணக்கில் கொண்டு ஆய்வு மேற்கொள்ளவும், மனிதத் திறனுக்கு ஏற்ற குறியீடுகளை வரையறுக்கவும், உதவி இயக்குநர் கூடுதல் இயக்குநரின் பணிகளையும் கடமைகளையும் மண்டல துணை இயக்குநர் இணை இயக்குநர் (நிர்வாகம்) இயக்குநர் ஆகியோருக்கு மாற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும், சிறப்பு திட்டங்கள் மூலம் பெறப்படும் மனுக்கள் மற்றும் பணிகளுக்கு கால நிர்ணயம் வழங்காமல் ஊழியர்கள் மீது பெரும் பணிச் சுமையை சுமத்துவதையும் நியாயமான தள்ளுபடிகளுக்கு ஆய்வு என்கிற பெயரில் ஊழியர்களை கடுமையாக நடத்துவதையும் கைவிட வேண்டும். ஆய்வாளர், துணை ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை களைந்திட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
The post நில அளவையர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.