×

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு நிறுத்தம்

குன்றத்தூர், டிச.19: கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக, ஏரியில் இருந்து முதல் கட்டமாக 1000 கன அடி உபரிநீரும், அதன் பிறகு படிப்படியாக 6000 கன அடி வரை உபரிநீர் திறந்து விடப்பட்டது. நீர்வரத்து குறைவு காரணமாக உபரிநீர் திறப்பது படிப்படியாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை வரை 500 கன அடி உபரிநீர் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்டு வந்த நிலையில், மழை விட்டநிலையில் நீர்வரத்து குறைந்ததால், நீரின் நீர்மட்ட உயரமும் குறைந்தது. இதனால், உபரிநீர் திறப்பது முற்றிலும் நேற்று மாலை முதல் நிறுத்தப்பட்டது. நேற்று மாலை நேர நிலவரப்படி ஏரியின் நீர்மட்ட உயரம் 21.21 அடியும், மொத்த கொள்ளளவு 2887 மில்லியன் கன அடியும், நீர்வரத்து 650 கன அடியாகவும் உள்ளது. கடந்த 6 நாட்களாக ஏரியில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில், நேற்று முற்றிலும் உபரிநீர் திறப்பது நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Chembarambakkam ,Kundrathur ,Chembarambakkam lake ,Chennai ,Dinakaran ,
× RELATED செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்திறப்பு...