×

கிராம மக்கள் 100 நாள் வேலை கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்

மதுராந்தகம்: மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், 100 நாள் வேலை கேட்டு கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுராந்தகம் ஒன்றியம், பாக்கம், சிலாவட்டம் ஆகிய ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் இந்த ஆண்டுக்கான வேலையை வழங்கிட கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுராந்தகம் வட்ட குழு உறுப்பினர் ஜீவானந்தம் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கிராம மக்கள் காத்திருக்கும் போராட்டத்தில் நேற்று காலை ஈடுபட்டனர்.

இதில், கட்சியின் மதுராந்தகம் வட்ட செயலாளர் ராஜா, முன்னாள் மாவட்ட செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட குழு உறுப்பினர் மாசிலாமணி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகம் வாயிலில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் 26ம் தேதி வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து கடிதம் வழங்கினார். இதனை அடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

The post கிராம மக்கள் 100 நாள் வேலை கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED பேருந்தில் மாணவர்கள் ஆபத்தான பயணம்: போலீசார் நியமிக்க கோரிக்கை